இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

Nila
4 years ago
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை தொடர்பில்  வெளியான தகவல்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

செலவு அதிகரிப்பு காரணமாகவும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அந்நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

எரிவாயு இறக்குமதி மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் ஆராயப்பட்டு இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4