ரஷ்யா – உக்ரேன் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசாவுக்கான காலப்பகுதி நீடிப்பு

Mayoorikka
4 years ago
ரஷ்யா – உக்ரேன் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசாவுக்கான காலப்பகுதி நீடிப்பு

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா வீசா அனுமதியை இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடிகள் இன்னுமே இயல்பு நிலைக்குத் திரும்பாதமையால், இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டவர்கள் எமது நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கக் கூடிய வகையில் அவர்களுடைய வீசாவுக்கான காலப்பகுதியை நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4