ஏப்ரல் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வத்திக்கானில் புனித ஆராதனை!

Mayoorikka
4 years ago
ஏப்ரல் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வத்திக்கானில் புனித ஆராதனை!

வத்திக்கான் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் பெஸிலிக்கா தேவாலயத்தில் இடம்பெறும் சிறப்பு ஆராதனையில் கலந்துக்கொள்வதற்காக புனித பாப்பரசர் வருகை தந்துள்ளார்.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்த சிறப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, இலங்கையிலிருந்து பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் வத்திக்கான் நோக்கி பயணமாகினர்.
  
பாப்பரசரின் சிறப்பு அழைப்பை ஏற்று குறித்த குழுவினர் பயணமாகியிருந்தனர்.
  
இவர்களில் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட சுமார் 30 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.

இலங்கையிலிருந்து சென்ற பேராயர் தலைமையிலான குறித்த குழுவினர் இன்றைய சிறப்பு ஆராதனைகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4