பிரதமரின் வீட்டை சுற்றி வளைத்த பல்கலைக்கழக மாணவர்கள்

Prabha Praneetha
4 years ago
பிரதமரின் வீட்டை சுற்றி வளைத்த பல்கலைக்கழக மாணவர்கள்

பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமரின் கொழும்பு – விஜேராம வீட்டை சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று  ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவிருந்தது.

இதனையடுத்து, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பல வீதிகளை முற்றாகத் தடுத்து பொலிஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே பேரணியாகச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது பிரதமரின் விஜேராம வீட்டை சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் வீட்டு வாயிலில் திரண்டுள்ள மாணவர்கள் கறுப்பு கொடியினை பறக்கவிட்டுள்ளதுடன், கோசமெழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4