22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 30 மனுக்கள்!
#SriLanka
#LANKA4
#Court
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை குறித்த திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், 3 மனுக்கள் திருத்தச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவும், 27 மனுக்கள் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மையை ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் நியமிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த விவகாரம் தொடர்பில் 3 வாரங்களுக்குள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே