ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக தலவாக்கலையில் போராட்டம்

Mayoorikka
4 years ago
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக தலவாக்கலையில் போராட்டம்

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தலவாக்கலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நகரின் மையப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் முற்றாக தடைப்பட்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருள், எரிவாயு, மின்சார நெருக்கடிகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4