பிரான்சில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணியத் தடை - தேசியப் பேரணிக் கட்சி திட்டம்!

#FRANCE #Women #Muslim #LANKA4 #World #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
பிரான்சில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணியத் தடை - தேசியப் பேரணிக் கட்சி திட்டம்!

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிவதைத் தடை செய்து, அதனை மீறுவோருக்கு தண்டப்பணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்-பிலிப் தங்கி, முக்காடு அணிவதைத் தடை செய்வது இஸ்லாமியவாதக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முன்மொழிவுக்கு பிரான்ஸ் மக்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

எனினும், முக்காடு அணிவோருக்கு விதிக்கப்படவுள்ள தண்டப்பணத்தின் தொகை குறித்து அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

பொது இடங்களில் முக்காடு அணிவதற்கான தடையை முன்னாள் அதிபர் தேர்தல்களிலும் தலைவி மரீன் லு பென் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4