உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்

Nila
4 years ago
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு இந்த நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார். 

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த வாரம் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரை தம்மிக்க பிரசாத் ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4