நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம

Mayoorikka
4 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்த முதல் நபர் தான் என்றும் கூறினார்.
மேலும் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் மூத்தவர்களை பரிசீலிக்க பரிந்துரைத போதும், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தவறான முடிவை எடுத்தார் என்றும் அதுவே இன்று முழு நாடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
  
இந்த நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு கூற வேண்டும் என குமார வெல்கம தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4