ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து அரசாங்கத்திலிருந்து வெளியேறினார் ஜீவன் தொண்டமான்!

Nila
4 years ago
ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து  அரசாங்கத்திலிருந்து வெளியேறினார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கத்திலிருந்து வெளியேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், பாராளுமன்றத்திலும் ஆதரவு வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியருந்தது.

குறிப்பாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி அதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

எனினும், அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லாமையினால், அதிருப்தி கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4