ஏப்ரல் 5 முதல் 8 வரையான மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை பின்வருமாறு.

#SriLanka #Power #Time
ஏப்ரல் 5 முதல் 8 வரையான மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை பின்வருமாறு.

நாளையதினம் (05) முதல் எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC1 ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் 3½ மற்றும் 6½ மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (05) மின்வெட்டு:

ABCDEFGHIJKL : 6½ மணித்தியாலங்கள்
- மு.ப. 8.00 - பி.ப. 5.00 வரை 4 மணித்தியாலங்கள்
- பி.ப. 5.00 - இரவு 10.00 வரை 2½ மணித்தியாலங்கள்

PQRSTUVW: 6½ மணித்தியாலங்கள்
- மு.ப. 10.00 - பி.ப. 6.00 வரை 4 மணித்தியாலங்கள்
- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 2½ மணித்தியாலங்கள்
CC1 : 3½ மணித்தியாலங்கள்
- மு.ப. 6.00 - மு.ப. 9.30 மணி வரை 3½ மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4