அரசியல்வாதியொவரின் மகனால் 35 மில்லியன் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒவியம்!
Nila
3 years ago

இலங்கை அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் ஒன்று, அதி கூடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணயைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அரசியல்வாதியின் மகனால், இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, தமது அத்தியாவசியப் பொருள்களுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலையில் அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் வாங்கப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



