பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர உலக வங்கியின் உதவியை நாடும் இலங்கை!

Nila
4 years ago
பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர உலக வங்கியின் உதவியை நாடும் இலங்கை!

இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை நாடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் அமெரிக்காவில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைய காரணமான கடன் சேவை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சுமார் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் விளைவாக உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில், கடனை திருப்பிச் செலுத்தும் பொறிமுறையை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இலங்கை ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4