எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை குறைவடைந்துள்ளது!

Mayoorikka
4 years ago
எரிபொருள்  நிரப்பு நிலையங்களில் வரிசை குறைவடைந்துள்ளது!

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்துள்ள போதிலும், நேற்றிரவும் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் வரிசைகள் காணப்பட்டன. எவ்வாறாயினும், கடந்த நாட்களை விட எரிபொருள் வரிசைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடனுதவியுடன் டீசல் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் நேற்று இலங்கை வந்தடைந்ததுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வரிசைகள் விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்த போதிலும் நேற்றைய தினம் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்பதைக் காணமுடிந்தது.

இதேவேளை, இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மிகவும் முக்கியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4