மக்களை அணிதிரட்டி கோட்டா அரசுக்கு அதிரடி காட்ட விமல், கம்மன்பில வியூகம் மாபெரும் போராட்டத்துக்குத் திட்டம்

#Wimal Weerawansa
Prasu
4 years ago
மக்களை அணிதிரட்டி கோட்டா அரசுக்கு அதிரடி காட்ட விமல், கம்மன்பில வியூகம் மாபெரும் போராட்டத்துக்குத் திட்டம்

'தாய் நாட்டை மீட்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரச எதிர்ப்பு 'அலை'யை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்துக்கு அரசில் அங்கம் வகிக்கும் சில பங்காளிக் கட்சிகளும் மறைமுக ஆதரவை வழங்கக்கூடும் எனத் தெரியவருகின்றது. 

கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கூட்டம் நடைபெறும் நாளில், விமல் தரப்புக்கு ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர் எனவும் தெற்கு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4