கொழும்பு துறைமுகத்தில் 472 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!
#SriLanka
#Colombo
#drugs
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 472 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
‘பரவி சுதா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் இந்தப் போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ‘அங்கொட பிரியந்த’ மற்றும் ‘ரூபன்’ ஆகியோரும் இந்தக் கடத்தலில் தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு துறைமுக கொள்கலன் முன்றலில் கடந்த 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட இரு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே