இலங்கையில் அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
#SriLanka
#School
Nila
3 years ago

அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காகித பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
பின்னர் துறைமுகத்தில் சிக்கியிருந்த காகிதம் தாங்கிய 8 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட காகிதம் தற்போது நிறைவடைந்துள்ளதன் காரணமாக அச்சிடல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



