இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா அறிக்கை!

Reha
3 years ago
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா அறிக்கை!

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருவரையொருவர் ஆதரித்து வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியாங் நேற்று (09) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​சீனாவிடம் இருந்து சீனா பெற்ற கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு சீன வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை விடுத்த கோரிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த ஊடகப் பேச்சாளர், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் முயற்சியுடனும் ஒத்துழைப்புடனும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக சிரமங்களை விரைவில் போக்க முடியும் என்றார்.

எதிர்காலத்தில் இலங்கை பெரும் அபிவிருத்தியை அடையும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!