அடுத்த இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு அபாயம் தனியார் துறையில் ஏற்படக்கூடும்.
#SriLanka
#drugs
#Dollar
Mugunthan Mugunthan
3 years ago

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் தனியார் துறையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரச மருந்தாளுனர் சங்கம் தெரிவித்துள்ளது. சில தனியார் நிறுவனங்களும் மருந்து விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக அதன் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டுமென அரசாங்க மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.



