போரினை தொடர்ந்து இலங்கையிலும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

ரஷ்யா - உக்ரைன் போரில் உலக அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
செட்டி வீதியிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும்.
மேலும், 22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.125,000 ஆகும்.



