இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ: தகவல் வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
Mayoorikka
3 years ago

சர்வகட்சி மாநாடு ஒன்றினை நடாத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து உடன் நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளது.
இதேபோல, நிபுணர்களின் கலந்துரையாடல் ஒன்றும் நடாத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி யோசனை முன்வைத்துள்ளதுடன், அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்குதாம் இணக்கம் தெரிவிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



