இலங்கையில் மதுபான விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் மதுபான விநியோகம்  தொடர்பில் வெளியான தகவல் !

இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான விநியோகம் நிறுத்தப்படும் என வெளியான தகவல் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டினால் ஏற்பட்ட எத்தனோல் தட்டுப்பாடு காரணமாக மது உற்பத்தி நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் 23 உரிமம் பெற்ற கலால் டிஸ்டில்லரிகள் மதுபானத்தை உற்பத்தி செய்துவருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எத்தனோல் மற்றும் தேவையான பிற மூலப்பொருட்களை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ள என முடியும் என்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4