பேருந்தில் முதியவரின் ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்து தப்பியோடிய இளைஞன்: பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

Prathees
4 years ago
பேருந்தில் முதியவரின் ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்து தப்பியோடிய இளைஞன்: பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த முதியவரின்  ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த சந்தேகநபரை அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மன்னார் நானாட்டானில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டகோது, பேருந்தில் பயணித்த முதியவரின் இருக்கைக்கு அருகில் இருந்த  இளைஞன் முதியவர் கையில் இருந்த பார்சலை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

முதியவர் தனது பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றதாக சத்தம் போட்டதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் சந்தேகமடைந்த நபரை துரத்திச் சென்று முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்

சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் அவர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4