உறவுக்கு மரியாதை. நம்பிக்கை ஏற்படும் வரையில் விருப்பமானவருடன் திருமணத்துக்குச் சம்மதிக்காதீர்கள். காதல் விதிகள். பாகம் - 13.

#Love #Article #Tamil People
உறவுக்கு மரியாதை. நம்பிக்கை ஏற்படும் வரையில் விருப்பமானவருடன் திருமணத்துக்குச் சம்மதிக்காதீர்கள். காதல் விதிகள். பாகம் - 13.

உங்கள் குடும்பத்தில் யாருடைய சொல்லுக்கு மரியாதை இருக்கிறது எனப் பாருங்கள்.  அல்லது உங்கள் குடும்பத்தில் காதலை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவத்தில் யார் இருக்கிறார்கள் எனப் பாருங்கள்.  அவரிடம் தஞ்சம் அடைந்துகொள்ளுங்கள்.  அவர் மாமா, சித்தப்பா, தாத்தா என யாராக இருந்தாலும் சரி. உங்கள் முழு காதலையும் மிகத் தெளிவாகச் சொல்லி உதவி கேளுங்கள்.  அவரைத் திருப்தி படுத்தும்படி உங்கள் காதல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

உங்களுக்கு ஆதரவாக ஒரு நபர் இருந்துவிட்டால் போதும்.  இனி மற்றவர்களது ஆதரவைப் பெறுதல் என்பது தாமதமாகலாமே தவிர முடியவே முடியாமல் போகிறது.  மேலும், ஒரு சிலர் ஆதரவை அவரால் கண்டிப்பாக பெற முடியும் என்பதால், இனி காதல் என்பதில் நீங்கள் தைரியமாகவே இருக்கலாம்.

எல்லாம் சரி, முதலில் காதலை ஆரம்பிக்க தைரியம் இல்லை என்கிறீர்களா?

அட, இதுவும் மிக எளிய விஷயம்தான்!

நீங்கள் எவரிடம் காதலைப் பற்றி சொல்லி ஆதரவு தேட வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவர்கள் பார்வையில் படும்படி, படு சோகமாக நில்லுங்கள்.  அல்லது அழுவது போல நடியுங்கள்.  இதெல்லாம் அதிகமான நடிப்பு என நினைப்பீர்கள் என்றால், அவர்கள் பார்க்கும்படி உங்களுக்கு வந்த காதல் கடிதத்தை வையுங்கள்.

அவர்களாகவே வந்து விஷயத்தை ஆரம்பிப்பார்கள்.  அப்புறம் என்ன, விஷயத்தை ஆரம்பித்து வெற்றியை நோக்கி நடைபோடுங்கள்.

இதுவரை சொன்னது எல்லாமே காதல் என்பதை நீங்க வீட்டில் வெளிப்படுத்தும்போது என்ற நிலையில்தானே.  அப்படியில்லாமல், பிறர் மூலம் அல்லது உங்கள் கடிதம் பார்த்து அவர்களாகத் தெரிந்து கொண்டால் என்ன செய்வது? இதுதான் மிகவும் சிக்கலான சூழல்.

நிறைய காதல் இதுபோன்ற நேரத்தில்தான் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது.  விஷயம் தெரிந்ததும் அடி, உதை விழலாம் அல்லது அர்ச்சனை கிடைக்கலாம்.  பார்த்து வந்த வேலையை விட வேண்டிய சூழலோ, மேற்கொண்டு படிக்கச் முடியாத இக்கட்டோ ஏற்படலாம்.  இன்னும் சிலர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத படி அடைத்து வைக்கப்படலாம்.  இதுபோன்ற எல்லாமே காதல் என்பதை நீங்க வீட்டில் வெளிப்படுத்தும்போது என்ற நிலையில்தானே.  அப்படியில்லாமல், பிறர் மூலம் அல்லது உங்கள் கடிதம் பார்த்து அவர்களாகத் தெரிந்து கொண்டால் என்ன செய்வது? இதுதான் மிகவும் சிக்கலான சூழல்.

நிறைய காதல் இதுபோன்ற நேரத்தில்தான் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது.  விஷயம் தெரிந்ததும் அடி, உதை விழலாம் அல்லது அர்ச்சனை கிடைக்கலாம்.  பார்த்து வந்த வேலையை விட வேண்டிய சூழலோ, மேற்கொண்டு படிக்கச் முடியாத இக்கட்டோ ஏற்படலாம்.  இன்னும் சிலர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத படி அடைத்து வைக்கப்படலாம்.  இதுபோன்ற நேரங்களில் உங்களுக்குத் தேவை மன உறுதி, நம்பிக்கை மற்றும் நேர்மை, அவ்வளவு தான்.

முதல் விஷயமாக பயம் என்பதை துடைத்துப்போடுங்கள்.  காதலிப்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள்.  ஆனால் இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யவில்லை. உங்களிடம் சொல்லும் அளவுக்கு இன்னும் காதல் உறுதியாகவில்லை என்பதாலேயே சொல்லவில்லை.  இனி முடிவு உங்கள் கையில் என்று சொல்லுங்கள்.

பெற்றோர் கோபப்படும்போது நீங்களும் கோபப்படுவதோ அல்லது எனக்கு உங்களைவிட காதல்தான் முக்கியம் என்றோ பேசாதீர்கள்.  உங்களைப் போலவே எனக்கு காதலைப் பிடித்திருக்கிறது.  நான் தேர்வு செய்தவர் சரியில்லை என்றால் சரியான காரணங்கள் சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியோடு சொல்லுங்கள்.

அவர்கள் கோபம் தீரும்வரை காதல் சந்திப்புகளில் ஈடுபட வேண்டாம்.  கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர் இயல்பு வாழ்வுக்குத் திரும்பிய பின்னர், உங்கள் காதலை மீண்டும் எடுத்துச் சொல்லி சம்மதம் தேடுங்கள்.  மிகமிக அபூர்வமாக ஒரு சில பெற்றோர் மட்டும் உடனடித் திருமணத்துக்கான வேலையை பார்ப்பார்கள்.  அப்படிப்பட்ட திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள இயலாது என்பதை மிகத் தீர்மானமாக சொல்லிவிடுங்கள்.

நிலைமை மோசமாவது தெரிந்தால், உங்கள் நட்பு ரீதியிலான நபர்களைக் கொண்டு காவல் துறைக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்.  உங்களை கட்டாயத் திருமணத்துக்கு ஆட்படுத்த வீட்டார் நினைக்கிறார்கள் என்றும், அதில் உங்களுக்குத் துளியும் விருப்பமில்லை என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

வயதில் நீங்கள் மேஜர் என்பதால் இதற்கு முழு உரிமை இருக்கிறது.  இதுபோன்ற விஷயங்களில் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க விரும்புவார்கள் என்பதால், உங்களால் கண்டிப்பாக கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இயலும்.

அதன் பிறகு, வீட்டில் சமூக உறவு நிலவுவது கடினம் என்றாலும், உங்கள் காதல், திருமணக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கை ஏற்படும் வரையில் விருப்பமானவருடன் திருமணத்துக்குச் சம்மதிக்காதீர்கள்.