தெருக்களில் காணப்படும் மனித உடல்கள்…. சிக்கி தவிக்கும் உக்ரைன் மக்கள்!
#world_news
Nila
3 years ago
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 12 வது நாளாக தொடர்ந்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக 15 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர்.
போரில் இருந்து தப்பித்தது 15 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைனின் துறைமுக நகரங்களை முனைப்பு காட்டி வருவதால் அங்கு சிக்கி தவிக்கும் மக்கள் எங்கும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மரியாபோல் நகர தெருக்களில் மனித உடல்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர் காரணமாக உயிரிழப்புகளோடு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் உக்ரைன் சந்தித்துள்ளது.
உணவு, குடிநீர் கிடைக்காமல் அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.