மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவமைப்பு கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய பெண்..!

Keerthi
3 years ago
மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவமைப்பு கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய பெண்..!

புனேவைச் சேர்ந்த பிரபல கேக் கலைஞரான பிராச்சி தபால் டெப், 'வேகன் ராயல் ஐசிங்' (Vegan Royal Icing) என்ற முறையில் 100 கிலோ எடையுள்ள மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவமைப்பு கொண்ட கேக் ஒன்றை செய்துள்ளார். இதற்காக உலக சாதனை புத்தகம் இவரை முன்மாதிரியான ராயல் ஐசிங் கலைஞர் என்று அங்கீகரித்துள்ளது.

பிராச்சி, 'ராயல் ஐசிங்' என்ற சிறப்பு வடிவங்களில் கேக் செய்யும் கடினமான கலையில் நிபுணத்துவம் பெற்றவராவார். ஐரோப்பிய கட்டிடக்கலை மாதிரியான முட்டை இல்லாத ராயல் ஐசிங் முறை மூலம் கேக்குளை தயார் செய்து பிரபலமானவர். பொதுவாக ராயல் ஐசிங் முறையில் கேக்கில் முட்டை கலந்தே கேக் செய்யப்படும். 

ஆனால்  பிராச்சி, இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முட்டை கலக்காமல் சைவ முறையில் வேகன் ராயல் ஐசிங் என்ற முறையில் கேக்குகளை வடிவமைக்கிறார். இந்த மிலான் கதீட்ரலின் கேக், 6 அடி 4 அங்குல நீளம், 4 அடி 6 அங்குல உயரம் மற்றும் 3 அடி 10 அங்குல அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!