மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது
Prabha Praneetha
3 years ago

28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது.
இதற்கான கொடுப்பனவாக சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, டீசல் தொகையை தரையிறக்கும் பணிகள் நாளை காலை ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



