வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்கப் பதவி விலகத் தீர்மானம்
Prasu
3 years ago

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்கப் பதவி விலகத் தீர்மானித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று இறுதி முடிவை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியால் நேற்று அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பால் சி.பி. கலக்கத்தில் இருக்கின்றார்.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனக்கு வேலைசெய்யக்கூடிய அமைச்சு பதவி கிடைக்குமென நம்பினார். எனினும், அது நடக்கவில்லை. இந்நிலையிலேயே பதவி விலக தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில், தனக்கு எதிரானவர் எனக் கருதப்படும் எஸ்.பிக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்பட்டமையும் அவரின் அதிருப்திக்குக் காரணமாக அமைந்துள்ளது.



