ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை முறிந்தது
Prathees
3 years ago

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கான இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனையை ஏற்க உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது.
பெலாரஸ் நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ரஷ்யா கூறியுள்ள நிலையில், போலந்தில் நடத்தப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் ஏற்கனவே உக்ரைனில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.



