பிரதமரின் கோரிக்கையை ஏற்று உக்ரைனுக்கு இணையசேவை வழங்கிய எலான் மஸ்க்
Prasu
3 years ago

உக்ரைன் நாட்டின்மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷியா நடத்தி வரும் போரினால் உக்ரைன் முழுவதும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் நாட்டு துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ் தங்கள் நாட்டிற்கு இணைய சேவை வழங்குமாறு உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்கிடம் டுவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது நிறுவனமான சாட்டிலைட் ஸ்டார்லிங்க் மூலம் உக்ரைனுக்கு இணைய சேவை வழங்கி வருகிறோம் என எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



