தம்பதெனிய இராச்சியத்தின் வரலாற்று பொக்கிஷங்களை உடைப்பு! பின்னால் இரு அமைச்சர்கள்..உண்ணாவிரதம் இருக்கும் பிக்குமார்
Prathees
3 years ago

தம்பதெனிய இராச்சியத்தின் வரலாற்று பொக்கிஷங்கள் உடைக்கப்படுவதாக வண.பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் அனுசரணையுடன் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவின் ஒப்பந்ததாரர் ஒருவரினால் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய இராச்சியம் அழிந்து வருவதாகவும், அவ்வாறு சென்றால் சீகிரியாஇ ஜய ஸ்ரீ மஹா போதி போன்ற இடங்களும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தின் முன் கதவுக்கு முன்பாக தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



