விகாரையொன்றில் பணத்தை திருடிய பெண் உட்பட இருவர் பொலிஸாரால் கைது!

Mayoorikka
3 years ago
விகாரையொன்றில் பணத்தை திருடிய  பெண் உட்பட இருவர் பொலிஸாரால் கைது!

புத்தளம் பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நந்தமித்தர பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்குள் நுழைந்து, 250,000 ரூபாய் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புத்தளம் ஆதியாகம பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 40, 22 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் விகாரையிலிருந்த திருடப்பட்ட பணத்தில் 40,900 ரூபாய் பணத்தை பொலிஸார் அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இருவரும் ரசநாயக்கபுர, மஹகும்புக்கடவல, கொபெய்கனு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட விகாரைகளிலும் பணத்தை திருடியுள்ளதுடன், பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பெரிலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!