இலங்கையில் கொரோனா பாிசோதனை தொடர்பான கட்டுப்பாடு நீக்கம்!

#SriLanka #Corona Virus
Nila
3 years ago
இலங்கையில்  கொரோனா பாிசோதனை தொடர்பான கட்டுப்பாடு நீக்கம்!

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் கட்டாயமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நபரொருவரின் பிரேத பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட சட்டவைத்திய அதிகாரியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!