போலி கோவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்த தாதியர்களுக்கு எதிராக வழக்கு
Prathees
3 years ago

போலி கோவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததற்காக இரண்டு அமெரிக்க தாதியர்கள் மீது நியூயார்க் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலியான கோவிட் தடுப்பூசி அட்டைகளை சுமார் 220 டொலருக்கு விற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இரண்டு தாதியர்களும், அவர்கள் பணியாற்றிய வைத்தியசாலை அதிகாரிகளும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலி கோவிட் தடுப்பு தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததாகவும், நிதி மோசடி செய்ததாகவும் பெலிசார் அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.



