பிலிப்பைன்ஸில் அதிகரித்த தொற்று... சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்.!!!
Keerthi
3 years ago

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று புதிதாக 31,173 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை நேற்றைவிட இன்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனினும் நாட்டில் மொத்தமாக தொற்று விகிதம் 43.5%-லிருந்து 43.3 ஆக குறைந்திருக்கிறது.
மேலும் தலைநகர் மணிலாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருப்பதாக அந்நாட்டின் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆய்வாளராக இருக்கும் டேவிட் கூறியிருக்கிறார். எனினும் மணிலாவிற்கு அருகே இருக்கும் நகரங்கள் உட்பட பல நகரங்களில் தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.



