இந்து கடவுள்களின் உருவம் கொண்ட பொருள்களுக்குத் தடை கோரும் சங்கம்

Keerthi
3 years ago
இந்து கடவுள்களின் உருவம் கொண்ட பொருள்களுக்குத் தடை கோரும் சங்கம்

அடுத்த வாரம் தைப்பூசத் திருவிழா வரும் நிலையில், இந்துக் கடவுள்களின் உருவங்களைக் கொண்ட டீ சட்டைகள், பூஜைப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கும்படி பினாங்கு இந்து சங்கம் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

பினாங்கு இந்து சங்கத் தலைவர் பி. முருகையா அந்தக் கோரிக்கையை அறிக்கை மூலம் விடுத்தார். 

விநாயகர், சிவன், கிருஷ்ணன், அம்மன் ஆகிய கடவுள்  உருவப் படங்கள் பூசைப் பொருட்களின் அட்டைகளிலும் டீ சட்டைகளிலும் பதிக்கப்பட்டு விற்கப்படுவதாக அவர் கூறினார். 

குறிப்பாக, பினாங்கு, கெடா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில கடைகள் இவை விற்பதாக திரு முருகையா சொன்னார். 

பூசை பொருட்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றின் அட்டைகளைக் குப்பைத்தொட்டியில் வீச வேண்டிவரும். இது இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.     

தைப்பூசத்தின் போதும் மற்ற இந்து திருவிழா காலங்களின்போதும் விற்பனையை அதிகரிப்பதற்காக, இந்து கடவுள் உருவப்படங்கள் உள்ள இத்தகைய பொருள்களில் பயன்படுத்தப்படுவதாக அவர் கருத்துரைத்தார். 

இத்தகைய பொருள்களை வாங்க வேண்டாம் என்று திரு முருகையா இந்துக்களைக் கேட்டுக்கொண்டார்.  

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!