மேலாடையால் பிரபஞ்ச அழகிக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு
மேலாடை அணியாத காரணத்தினால், முன்னாள் பிரபஞ்ச அழகிக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நபரும், கடந்த 2012 ஆம் ஆண்டு, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவருமானவர் ஒலிவியா காப்லோவிற்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இவர் மெக்சிகோவிற்குச் செல்வதற்காக தனது சகோதரி மற்றும் காதலருடன் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
எனினும் அங்கு ஒலிவியாவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்து வந்த உடைக்கு மேல் வேறு ஒரு உடையை அணிந்தால் மாத்திரமே உள்ள செல்ல அனுமதி வழங்கப்படுமெனத் தெரிவத்துள்ளனர்.
இதனையடுத்து ஒலிவியா, தனது காதலருக்குச் சொந்தமான ஆடை ஒன்றை அணிந்த பிறகே, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஒலிவியாவின் சகோதரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ” குறித்த விமான நிலையத்திற்குள் ஒலிவியாவைப் போன்ற சில பெண்கள், உடை அணிந்து இருந்ததாகவும் அவர்களை எல்லாம் அனுமதித்த அதிகாரிகள், ஒலிவிவாவை மாத்திரம் ஏன் அனுமதிக்கவில்லை என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த வீடியோவானது இணைத்தில் லைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்