கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் விலை

Prabha Praneetha
3 years ago
கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் விலை

இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் மொத்த விற்பனை விலை 600 ரூபாவிலிருந்து 670 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் தேங்காயின் விலை 65 - 85 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து பாம் எண்ணைய் இந்த நாட்களில் இறக்குமதி செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு கொப்பரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்குமாறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் அந்தத் தேவையை பூர்த்தி செய்யப்படாததால், சந்தையில் தேங்காய் எண்ணெய், தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!