வடக்கு புகையிரத மார்க்கத்தில் ஒரு பகுதி மூடப்படுகிறது
Prabha Praneetha
3 years ago
வடக்கில் புகையிரத பாதையின் ஒரு பகுதியை 6 மாதங்களுக்கு மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான புகையிரத பாதை அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 120 கிலோமீற்றர் பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த புகையிரத பாதையில் புகையிரதங்கள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.
மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் புகையிரதங்கள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்