ஸ்ரீபாத யாத்திரையில் அதிக சன நெரிசல்

Prathees
3 years ago
 ஸ்ரீபாத யாத்திரையில் அதிக சன நெரிசல்

வார இறுதி நாட்களில் அதிகளவான யாத்திரிகர்கள் வருகை காரணமாக நல்லதண்ணி ஸ்ரீ பாத வீதியில் பல நிமிடங்கள் தங்கியிருந்ததாக நல்லதண்ணியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையுடன் கூடிய நீண்ட வார இறுதி நாட்களின் காரணமாக இந்த இரண்டு நாட்களிலும் பெருமளவான யாத்திரிகர்கள் ஸ்ரீ பாதத்தை தரிசனம் செய்ய வருகை தந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான அதிகளவான பக்தர்கள் ஸ்ரீபாத தரிசனம் செய்ய வருவதால் நல்லதண்ணி ஸ்ரீ பாத வீதியில் சன நெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் சில இடங்களில் பல நிமிடங்கள் யாத்திரிகர்கள் ஒரே இடத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லதண்ணி வாகன நிறுத்துமிடம் பக்தர்கள் வரும் வாகனங்களால் நிரம்பியிருந்ததால், நல்லதண்ணியில் இருந்து மோகினி அருவிக்கு அருகில் பக்தர்கள் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித டி அல்விஸின் பணிப்புரையின் பேரில் அனைத்து யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நல்லதண்ணியா பொலிஸார் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!