நீண்ட பாச போராட்டத்தின் பின் தாத்தாவிடம் சேர்ந்த ஆப்கான் குழந்தை

பிரிவும் இழப்பும் மனித வாழ்க்கையில் கொடியது போல் மீண்டும் இணைவதும் காண்பதும் இறைவனின் அற்புதமே.
ஆப்கானிஸ்தான் 20 வருட யுத்தம் 2021 ஆகஸ்ட் முடிவுக்கு வர , பல்லாயிரம் மக்கள் இருந்த உடையுடன் தப்பி தமது சொந்த நாட்டை விட்டு ஓட்டம்.
இவ் வகையில், ஒரு குடும்பம் 5 பிள்ளை சகிதமாக, அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு முண்டியடித்த முயற்சி.
தாயின் கையில் இருந்த 2 மாத குழந்தை நெருக்குப்படவே ,குழந்தையை அருகில் ஓர் அமெரிக்க ராணுவ வீரரிடம் தாய் கையளிக்கிறாள். துரதிஷ்டம், பிள்ளை தவற விடப்பட்டு தனியாக தவிக்கிறது.
பிள்ளையின் தாய் தந்தை மற்றைய பிள்ளைகளுடன் அமெரிக்கா சென்று சேர்கின்றனர்.
தனித்த 2 மாத குழந்தை அழுத குரல் கேட்டு, ஓர் டாக்சி சாரதி எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம் மகிழ்வுடன் கொடுக்க அவர்களும் குழந்தைக்கு பெயர் இட்டு அன்பாக வளர்க்கின்றனர்.
குழந்தையின் தாத்தா தனது பேரனை தேடி ஆப்கானிஸ்தான் முழுவதும் தகவல் கொடுத்த நிலையில், எதிர்பாராதவிதமாக குழந்தையின் வளர்ப்பிடம் தெரிய வரவே, விரைந்து சென்று தன் பேரனை தன்னிடம் தருமாறு கெஞ்சுகிறார்.
நீண்ட பாச இழுபறியின் பின்னர் குழந்தை தாத்தாவிடம் சேர்கிறது . வளர்த்த தற்காலிக தந்தை அழும் காட்சி கவலை தருகிறது.( படத்தில்)

இப்போது நிறைவாக, அமெரிக்காவில் இருக்கும் சொந்த தாய் தந்தை மற்றும் உடன்பிறப்புகள் அனைவருடனும் இணைவதற்கு குழந்தை, அமெரிக்கா செல்வதற்கு ஆயத்தமாகிறது .
பிரிவும் இணைவும் எல்லாம் அவனின் கையில் என்பது மறுப்பதற்கில்லை .



