போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது

Prabha Praneetha
3 years ago
போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது

பல பகுதிகளில் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், கிராண்ட்பாஸ் மற்றும் பானந்துறை பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார், தாராபுரம் சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 05 கிராம் ஹெரோயினுடன் கிராண்ட்பாஸ், வடுல்லவத்த பிரதேசத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாணந்துறை இரத்துவத்த பிரதேசத்தில் 105 கிராம் ஹெரோயினுடன் 44 வயதுடைய பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!