உலகத்தில் முதன் முதலாக மனிதர் ஒருவருக்கு பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை

மோசமான இதய நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட 57 வயதான Bennett எனும் மனிதருக்கு, இதய மாற்று சிகிச்சை ஒன்றே அவர் உயிர் வாழ்வதற்கு தீர்வாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தனர் .
இதன் அடிப்படையில் அவருக்கு விரைவாக மரபணு ரீதியாக மாற்றி அமைக்க கூடிய இதயம் தேவைப்பட்டது .
ஆனால் அமெரிக்காவில் ஒரு நாளில் மட்டும் 17 பேருக்கு இதய மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போர் என்ற விகிதப்படி 1 லட்சம் பேர் வரை வரிசையில் உள்ளனர் என்பது மிகவும் சவாலாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த மனிதரை பொறுத்தவரை நீண்ட நாட்கள் காத்திருக்க கூடிய உடல் நிலை இல்லை என்பதாலும் அவருடைய இயக்கம் மோசமான நிலையை எட்டி விட்டதாலும் அவருக்கு ஏதாவது ஒரு மாற்று வழியை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்ததில் இறுதியாக
மரபணு ரீதியாக அமையக் கூடிய பன்றி
ஒன்றின் இதயத்தை மாற்றி அமைக்க தீர்மானித்ததன் அடிப்படையில்
அறுவை சிகிச்சை நாள் குறிக்கப்பட்டு
வாழ்வா சாவா என்ற நிலையில் வைத்திய நிபுணர் குழு களம் இறங்கியது.
அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் Bartley சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னர் கூறுகையில், " வேறு வழியில்லை இவரின் வாழ்வு நிலைப்பதும் அல்லது பிழைப்பதும் மிகவும் சவாலானது "
என்றார்.
இப்போது , 7 மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது. அவரின் மூச்சு விடும் போக்கு 24 மணி நேரமும் கண்காணிக்கபடுகிறது.
அதேநேரம் தொடர்ந்து 6 வாரங்களுக்கு இவர் படுத்த படுக்கையில் ஒரு சில கருவியின் துணையுடன் இருப்பது அவசியம் என்று கூறும்
மருத்துவ நிபுணர்கள் அதேநேரம் , அவரின் நீடித்த வாழ்வு, ஒரு நாளா, ஒரு வாரமா அல்லது ஒரு வருடமா இல்லை அதற்கு மேலானதா என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும் என்கிறார்கள் .
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



