30 கோடி இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை கொண்ட பிரபல பெண்மணி யார் தெரியுமா?

அமெரிக்க சமூக ஊடக பிரபலமும் தொழில் அதிபருமான கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிகம் பின்தொடரும் பிரபல பெண்மணி ஆனார். சமீபத்தில் இந்த சாதனையை நிகழ்த்திய பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவை முறியடித்தார். ஜென்னர் கணக்கில் நேற்று 30 கோடி பின்தொடர்பவர்களை எட்டியுள்ளது என்பதைக் காட்டியது.
நவம்பர் 5 அன்று ஹூஸ்டனில் நடந்த ஆஸ்ட்ரோவொர்ல்ட் இசை விழாவில் தனது கூட்டாளியான டிராவிஸ் ஸ்காட்டின் நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி பத்து பேர் இறந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இருந்து கைலி சற்று ஒதுங்கி இருந்தார்.
Kylie just made history! ??
— PhilSTAR L!fe (@philstarlife) January 13, 2022
Internet star and socialite Kylie Jenner made Instagram history after becoming the first woman to reach 300 million followers. ? #KylieJenner #Instagram
Read more: https://t.co/eY48MoLfbt pic.twitter.com/Jxyzfxkmxq
மிக அண்மையில். ஜென்னர் கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றைக் காட்டும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். அவர் இந்த புதிய ஆண்டை முதல் படத்துடன் வரவேற்றார், அது லட்ச கணக்கான விருப்பங்களையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் குவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட புகைப்படம் என்ற ஜென்னரின் முந்தைய பதிவு அவரது மகள் ஸ்டோர்மியுடன் இருந்தது. இது 2018 இல் பகிரப்பட்டதில் இருந்து 1.83 கோடிக்கும் அதிகமான 'லைக்குகளை' குவித்துள்ளது
உலகளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட நபருக்கான தலைப்பு இன்னும் கால்பந்து பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் உள்ளது. சமூக ஊடக பயன்பாட்டில் அவருக்கு சுமார் 38.9 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கு 46 கோடி பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



