தோற்றம் முக்கியமல்ல - காதல் விதிகள் - பாகம் - 3.

#Lifestyle #Tamil People #Love
தோற்றம் முக்கியமல்ல - காதல் விதிகள் - பாகம் - 3.

தோற்றம் முக்கியமல்ல

உலகில் எண்ணற்ற ஆண்களும் பெண்களும் மேலோட்டமானவர்களாக இருக்கிறார்கள் . அவர்கள் தங்கள் காதலர்களை , அவர்களுடைய அழகுக்காக மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்களே தவிர , மனதார காதலிப்பதில்லை .

உங்களை உண்மையிலேயே விரும்பக்கூடியவர் , உங்களை உங்களுக்காக விரும்புவார் . உங்களுடைய தோற்ற குறைகளை பொருட்படுத்தமாட்டார் (அதை தோற்ற குறை என்று அவர் கருதினாலும் ). குண்டாக இருப்பதாலோ , கண்ணாடி அணிந்திருப்பதாலோ , அல்லது நீளமான மூக்கு இருப்பதாலோ , பொருத்தமான ஒருவரை வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? நிச்சயம் முடியாது.

அதே போல் , பொருத்தமான ஒருவரும் உங்களை அப்படி சொல்ல மாட்டார் . உண்மையில் இது தோற்றத்தை பற்றியது மட்டுமல்ல . இது செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் கூட பொருந்தும் . ஏழ்மையில் இருப்பதோ , கார் இல்லாமல் இருப்பதோ அல்லது வாடகை வீட்டில் இருப்பதோ ஒரு பொருட்டல்ல

வேண்டுமென்றால், பல் மருத்துவரிடம் போய் உங்கள் பல்லை சரிசெய்து கொள்ளுங்கள் . பைத்தியம் இருந்து , தேவையற்ற எடையை குறைத்துக்கொள்ளுங்கள் . தலையில் கேசத்தை பயிரிட்டுக்கொள்ளுங்கள். உயரத்துக்கு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. என் உயரமான தோழி ஒருத்தி , தனக்கு பிடித்த பையனை பார்த்தவுடன் , தானும் குனிந்து நடக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தாள் .

நான் சொல்ல வருவது என்னவென்றால் , இப்படி செய்வதனால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்றால் , அதை செய்யுங்கள். ஆனால் இதனால் எல்லாம் உங்களுக்கு தகுந்த துணைவர் கிடைப்பார் என்று மட்டும் நம்ப வேண்டாம் . உங்களுக்கான பொருத்தமான நபர் எங்கோ பிறந்திருப்பர்ர் , அவர் உங்களை எப்படியானாலும் கண்டுபிடித்துவிடுவார்.

அதனால் தைரியமாக இருங்கள் . உங்களை உங்கள் புற அழகுக்காக மட்டும் அல்லாமல் , முழுமையாக மனதார விரும்பக்கூடிய ஒருவருக்கு நீங்கள் அழகாக தெரிவீர்கள். அப்படிப்பட்டவரை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் , உங்களுக்குக்கே நீங்கள் கவர்ச்சிகரமாகவும் சிறப்பானவராகவும் தெரிவீர்கள் . உங்களிடம் இருக்கும் குறைகள் எல்லாம் முற்றிலும் மறந்து போய்விடும் .

மேலும் வாழ்வியல் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.