சீரடி சாய் பாபா பாடல் ”உலகாளும் சாயி....”

#spiritual #Holy sprit
சீரடி சாய் பாபா பாடல் ”உலகாளும் சாயி....”

உலகாளும் சாயி உயிராலும் சாயி ராம்
எனை ஆளும் சாயி உன் ஆரத்தி தான்
உலகாளும் சாயி உயிராலும் சாயி ராம்
எனை ஆளும் சாயி உன் ஆரத்தி தான்

தெய்வீகம் ஆளும் உனை தொழுதவர்க்கே
அறியும், வின் மண்ணும் காணாத ஆரத்தி தான்
உலகாளும் சாயி உயிராலும் சாயி ராம்
எனை ஆளும் சாயி உன் ஆரத்தி தான்

கண்கொண்டு பார்ப்போருக்கு ஆனந்தம் வழிய
கண்ணனாய் ராமனாய் சாய் எங்கும் தெரிய
மனம் தேடிடும் மடிவாய் சாயி கொலுவிருக்க
நினைக்கின்ற உருவெள்ளம் பாபா தான் எடுக்க
பாதமே கதி என்று பஜனைகள் நடக்க

பாடலை உணர்தவர்க்கோ சாயி குரல் ஒலிக்க
விழி நீர் துடைக்க.. பன்னீர் தெளிக்க
பல பல மொழிகளில் எல்லோரும் அழைக்க
சாயவன் சுகமதில் ரீங்காரம் தழைக்க

உலகாளும் சாயி உயிராலும் சாயி ராம்
எனை ஆளும் சாயி உன் ஆரத்தி தான்

தூமையின் நெருப்பிலே தீமைகள் தெறிக்க
ஓதுவார் ஓதியே சாயியை அழைக்க
சாஸ்வதம் ஸாயிதான் சங்கீதம் முழங்க
சங்கேத காட்சியில் சாயி நின்று சிரிக்க
வேத ஒளி நாதா ஒளி ஸ்வரம் பாடி துதிக்க
வேண்டோர் வேண்டுதலோ விருப்பமாய் நடக்க
நினைத்தது பலிக்க, கனவுகள் ஜெயிக்க

சதாநிம்ப விருக்சஸ்ய மூலாதி வாசா
சுதா ஸ்ரவினம் திக்த மபிய பரியந்தம்
தரும் கல்ப விருக்சாதிக்கம் சதாயந்தம் நமாமீஸ்வரம்
சத்குரு சாயி நாதம்

தஞ்சமே சாயென்று தவம் அங்கு நடக்க
அச்சமே ஏன் என்று அவன் மொழி கேட்க
உலகாளும் சாயி உயிராலும் சாயி ராம்
எனை ஆளும் சாயி உன் ஆரத்தி தான்

மேலும் ஆன்மீகம் தொடர்பான தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!