நடிகர் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் ஒத்திவைப்பு..!

Prasu
3 years ago
நடிகர் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் ஒத்திவைப்பு..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ,திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.கொரோனா பரவல் காலத்தில் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக   படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!