பிரபஞ்சத்திற்காக சஜித் பிரேமதாச வட பகுதிக்கு விஜயம்!

Mayoorikka
3 years ago
பிரபஞ்சத்திற்காக சஜித் பிரேமதாச வட பகுதிக்கு விஜயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின்  பிரபஞ்சம் என்னும் வேலைத்திட்டத்திற்க்கு அமைய   எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச வடமாகாணத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.

 எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச எதிர்வரும்  7 ஆம் திகதி  வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதுடன் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.

10ம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும்  11 மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்  பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். இதன்போது பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் பல்வேறுபட்ட சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடாத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
 
இதேவேளை  நேற்றைய தினம் சஜித் பிரேமதாஸ திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் கோவிலுக்கு சென்ற அவர் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். 

தொடர்ந்து பாடசாலைகளுக்கான நவீன கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயத்தின் திறன் வகுப்பறைக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இன்று நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழல் என்பன மேலோங்கி காணப்படுவதாக சாடினார்.

பொய் பித்தலாட்டம் மற்றும் அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துதல் என்பனதற்போதைய 
 அரசாங்கத்தின் செயற்பாடுகளாக காணப்படுகிறது.

ஒரு நாட்டினை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டுமெனில் நாட்டில் காணப்படுகின்ற வளங்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!