ஒமிக்ரான் தொற்றின் புதிய அறிகுறி அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் கூறும் முக்கிய தகவல்..

அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் உங்களின் தோல், உதடுகள் மற்றும் நகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்பட்டால் அது கொரோனா அறிகுறியாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்திருப்பதாவது, ஒருவருக்கு, தோல், நகங்கள் அல்லது உதடுகள் சாம்பல் நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இவ்வாறு சாம்பல் நிறத்தில் இருக்கும் உதடுகள், தோல் அல்லது நகங்கள் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகளாக கூறப்பட்டது.
ஆனால், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து இவ்வாறு சாம்பல் நிறமாக மாறினால், உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மேலும், தலைவலி, தொண்டை அலர்ஜி மற்றும் தலை சுற்றுவது உட்பட சுமார் 11 அறிகுறிகள் கொரோனா அறிகுறிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



