பொரளை நகைக்கடையில் கொள்ளை: சிக்கினார் பிரதான சந்தேக நபர்

Prathees
3 years ago
பொரளை நகைக்கடையில் கொள்ளை: சிக்கினார் பிரதான சந்தேக நபர்

பொரளையிலுள்ள நகைக்கடையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்களை கொள்ளையிட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நவகமுவ பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் இன்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேகநபர்கள், தங்காபரண விற்பனை நிலையத்திற்குள் புகுந்து, மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தங்காபரணங்களை திருடிச்சென்றனர்.

கொள்ளைச் சம்பவத்தின் போது உளவுபார்த்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!